கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவுசெய்தார் அமைச்சர் டக்ளஸ் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்!

Friday, March 8th, 2024

உடுப்பிட்டி கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநயோகம் நீண்டகாலமாக வழங்கப்படாதிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொணடு வந்திரந்தனர்.

இந்நிலையில் தமது பிரதேச மக்களுக்கு குடிநீரை பெற்றுத்தருமாறு சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த பகுதி மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து நீர்விநியோகத்திற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றையதினம்(08.03.2024) குறித்த பகுதிக்கான குடிநீர் விநயோகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

உடுப்பிட்டி கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய தலைவர் கஜேந்திரன் செயலாளர் சதீஸ் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது அமைச்சரது இந்த மக்கள் நலன் செவையை பாராட்டிய மக்கள் அமைச்சருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:


ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளை மீண்டும் ஏற்பு!
நாம் வழங்கும் வாக்குறுதிகளுக்கு நாமே பொறுப்பானவர்கள்: மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டியது எம்ம...
யாழ்ப்பாணம் - புத்தளம் மீனவர் கூட்டுறவுசங்கங்களின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விசேட திட்ட...