கடலுணவு மற்றும் நன்னீர் உற்பத்திகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, June 21st, 2024

இலங்கையில் இருந்து கடலுணவு மற்றும் நன்னீர் உற்பத்திகளின் ஏற்றுமதியை எதிர்காலத்தில் அதிகரிப்பது, அதற்கான புதிய தொழில்நுட்பத்தையும்,முதலீட்டு பங்காளிகளையும் உள்ளீர்க்கும் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் ஆராயப்பட்டது.

கடற்றொழில் அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் முதலீட்டு ஆலோசனை அதிகாரிகள் கலந்துகொண்ட குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தமது அவதானிப்புகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சின் கீழான நாரா, நெக்டா நிறுவனங்களின் அதிகாரிகளும், பிரதானமான மீன் ஏற்றுமதி நிறுவனங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனி...
பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: அமைச்சர் டக்ளஸ் இணக்கம்!
இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...