கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

கடலட்டைப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் திணைக்களம், நக்டா மற்றும் நாரா நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், அரச மற்றும் தனியார் கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடியளவு கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதுடன், மேலதிக தேவைகளுக்கு கடலில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு, வரையறைகளுடன் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
000
Related posts:
தமிழர் தேச விடியலுக்கு வரலாறு எமக்களித்த வரமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா!....
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...
சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ...
|
|