கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு – எவ்வித தடையுமின்றி பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை!

Monday, March 8th, 2021

நாட்டிலுள்ள கடற்றொழிலாளர்கள் மண்னெண்ணெயை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் இன்று காலை நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின்போது மண்ணெண்ணையை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சின் செயலாளர், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், உதவிப் பணிப்பாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் மண்ணெண்ணெய்க்கான மானியங்கள் எவ்வித முறைகேடுகளும் இன்றி நேரடியாக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுமாறும் அது தொடர்பான நடைமுறைகளை வகுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்..

2021 பெப்ரவரி 05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைய கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் முதல் முறையாக இன்று கூடியது. இதன்போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் அரச வங்கிகளிடமிருந்து டொலர்களில் கடன் பெறுவதற்கு பதிலாக ரூபாயில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு குறித்து கலந்துரையாடுமாறு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இதன்போது பிரதமருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த கூட்டத்தில் அமைச்சரவை துணைக்குழு உறுப்பினர்களும் அமைச்சர்களுமான டக்ளஸ் தேவானந்தா, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உழைப்பவர் தினத்தில் உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்!.... மேதின செய்தியில் டக்ளஸ் தேவானந்தா
எமது மக்கள் முழுமையான சுதந்திரம்பெற தமிழ்த் தலைமைகள் நியாயமாக உழைக்கவில்லை- டக்ளஸ் தேவானந்தா அவர்களத...
எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் - அமைச்சர் டக்ளஸ்...