கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவதற்கு மேற்கொள்ளக் கூடிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உதவிப்பணிப்பாளர் சுதாகரன், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிருஷாந்த மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கிடையிலான விரிவான கலந்துரையாடல் ஒன்றை நாளை(31.10.2020) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை - டக்ளஸ் ...
‘வீடு’ காட்டி எமது மக்களை ஏமாற்றாதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!
வல்வையில் இழுவைப் படகு மீன்பிடி விவகாரத்தை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
|
|