கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது. – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Monday, February 27th, 2023

இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய சுயலாப நலன்களுக்காக சில தரப்புக்கள் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர், கடந்த காலங்களில் சீனாவினால் கடலட்டைப் பண்ணை கள் அமைக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட புரளிகள் தோற்றுப் போன நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்கப் போகின்றது என்ற கதைகளை கூற ஆரம்பித்துள்ளதாகவும், இவ்வாறான புரளிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – 27.02.2024

Related posts:

ஊர்காற்றுறை, கண்ணகி அம்மன் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - பயணிகள் போக்குவரத்தி...
தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான அரச திணைக்களங்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என...
பொதுமக்களின் இயல்பு வாழ்விற்கு இடையுறாக இருக்கும் தடைகளை அகற்றும் வகையில் முடிவுகள் அமைய வேண்டும் ...

இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே எனது அரசியல் தந்திரோபாயம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...
தனியார் நிறுவனம் சட்ட விரோத காணி அபகரிப்பு - தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு தியோநகர் மக்கள் அமைச்...