கடந்தகால ஆட்சியாளர்களால் தவறாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் போன்று எனது காலத்தில் நடைபெற இடமளிக்க மாட்டேன் – கிராமிய அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, March 17th, 2021

கடந்தகால ஆட்சியாளர்களால் தவறாக முன்னெடுக்கப்பட்ட பருத்தித்துறை மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

245 மில்லியன் டொலரில் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தில் யாழ்ப்’பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை மற்றும் குருநகரிலும் அபிவிருத்தி செய்யும் அதேவேளை மன்னார் மாவட்டத்தின் பேசாலையிலும் பாரிய மீன்பிடித்துறைமுகங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோன்று வடமாகாணத்தில் பல சிறிய இறங்குதுறைகளை இத்திட்டத்தினூடாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் நிர்மாணிக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகங்களுள் குறிப்பாக பருத்தித்துறை துறைமுகத்தில் 170 இற்கும் மேற்பட்ட பலநாள் கலங்கள் தரித்து நிற்பதற்கேற்ற வகையில் துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இப் பலநாள் கலங்களின் உரிமைகளை எமது பகுதி கடற்றொழிலாளர்களுக்கே வழங்குவதற்கும் அதற்கான மானியங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்ததுடன் கடந்தகால ஆட்சியாளர்களால் தவறாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் போன்று எனது காலத்தில் நடைபெற இடமளிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான குறித்த கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றிருந்து.

இதன்போது கடற்றொழில், பெருந்தோட்டம், கிராமிய பொருளாதாரம் உள்ளிட்ட அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படக் கூடிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட அதேவேளை துறைசார்ந்தோரிடமிருந்து ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

000

Related posts:


படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை - ஊடகவியலாளர் சந்த...
தயக்கமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுங்கள் – சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடு தயார் - அமைச்சர்...
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிள...