கடந்தகாலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்!
Thursday, December 16th, 2021
மன்னார் மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில், விவசாய நடவடிக்கைகளுக்கு பொருத்தமான பிரதேசங்கள் மற்றும் கடந்தகாலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களை விடுவிக்கும் நோக்கிலான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்கா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் கடந்தகால யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் பராமரிப்பின்றி காடுகளாக மாறியிருந்த நிலையில், வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் அவை பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக துறைசார் தரப்புக்களுடனும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பயனாக, ஜனாதிபதி விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய இக்கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


