கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்துகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேருந்தில் பயணம்!
Friday, March 3rd, 2023
கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் பேருந்தில் பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
குறித்த பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை – இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், இலங்கையின் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் இடையிலான நல்லெண்ண சந்திப்பு ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே கச்சதீவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்ய ஒன்றுபட்டு உழைப்போம் - வேட்பாளர்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்த...
கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் - அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!
நாச்சிக்குடா இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம் !
|
|
|


