ஒலுவில் துறைமுகத்தில் ரின்மீன் தொழிற்சாலை ஒப்பந்தம் கைச்சாத்து!

Tuesday, February 7th, 2023

உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டது.

அம்பாறை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் அமைந்துள்ள ரின்மீன் உற்பத்தித் தொழிற்சாலையை தனியார் முதலீட்டாளர் ஊடாக புனரமைத்து மீண்டும் இயங்கச் செய்து உற்பத்தியை அதிகரிக்கவும், இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கவும் எடுக்கப்பட்ட தொடர் முயற்சியின் பெறுபேறாக இன்றைய தினம் (07.02.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தனியார் கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையே குறித்த ஒப்பந்தம் அமைச்சில் கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!
வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெ...
பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைக...