வேலணை பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Thursday, February 28th, 2019

தீர்வுகாணப்பட முடியாதிருக்கின்ற எமது மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ள போதிலும் எமக்கு போதியளவு அரசியல் பலம் இல்லாத நிலையில் அவற்றை சாத்தியமாக்குவதிலும் செயற்படுத்துவதிலும்  காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையை கருத்திற்கொண்டு எதிர்காலங்களில் மக்கள் எமக்கு முழுமையான அரசியல் பலத்தை தருவார்களேயானால் மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் எம்மால் உரிய முறையில் தீர்வு காண முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலணைப் பிரதேச உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆலோசனைசபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தீவக மண்ணுக்கும் அங்கு வாழ்கின்ற மக்களுக்கும் எமக்கும் நீண்டகால நட்பும் தொடர்புகளும் இற்றைவரையில் தொடர்ந்தே வருகின்றது. தீவக மக்கள் எதிர்கொண்டு வரும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உரியதான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தாம் மிகுந்த அக்கறையுடன் மட்டுமல்லாது அர்ப்பணிப்புடனும் உழைத்து வருகின்றோம். ஆரம்ப காலங்களில் குறிப்பாக 90களிலிருந்து தீவக மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்காக நாம் தொடர்ச்சியாக உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். கடந்த காலங்களில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய பிரதெச சபைகளை மக்கள் எம்மிடம் பொறுப்பு தந்திருந்த போது அக்காலகட்டங்களில் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டு இருக்கின்றோம். ஆனாலும் தற்போதும் கூட தீவக மக்கள் எம் கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் நிச்சயம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் தீவக மக்களின் எதிர்பார்ப்பு ஒருபோதும் வீணாகமாட்டாது. குறிப்பாக  தீவக மக்கள் காலத்திற்கு காலம் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் நிலையில் அதற்கு சரியானதொரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம். அதன் பிரகாரம்தான் முன்னைய காலங்களில் யாழ்ப்பாணம் இரணைமடுக் குடிநீர் திட்டத்தை நாம் வரவேற்று அதனை செயற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அதற்காக எமது முழு ஆதரவினையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தொம். இப்போதும் தீவகம் உள்ளிட்ட குடாநாட்டு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் இரணைமடு குடிநீர் திட்டம்தான் சாத்தியமானது என வலியுறுத்தியும் வருகின்றோம்.

வேலணை பிரதேசத்தில் கடந்த காலங்களில் நாம் எமது கட்சியினூடாக பல்வேறுப்பட்ட மக்கள் நலன்சார்ந்ததும் இன்னும் பல்வேறு விதமானதுமான செயற்திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம். அதேபோன்று எதிர்காலங்களிலும் இவ்வாறே முன்னெடுக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். இவற்றைவிட பாரியதான அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு எமக்கு அதிகளவான அரசியல் பலத்தை எமது மக்கள் ஒன்றிணைந்து தருவார்களேயானால் தீவகம் மட்டுமல்லாது யாழ்ப்பாணம் உள்ளடங்கலான வடக்கு மாகாணத்தை மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் நாம் எமது மக்களுக்கான வாழ்வியலில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவோம்.

நாம் இன்று எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தொடர்ந்தும் எமது அடுத்த சந்ததியினருக்கும் விட்டுச் செல்லமுடியாது. தீர்வுகாணப்படாது தொடர்ந்துவரும்  பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை எமது காலத்திலேயே நாம் காணவேண்டும். தென்னிலங்கை அரசுடனும் மக்களுடனும் எமக்குள்ள நல்லுறவின் காரணமாக எமது மக்களின் தீரா பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான வழிமுறையை முன்னெடுத்து அதை வெற்றிகொள்வதற்கான பொறிமுறை எம்மிடம் உள்ளது என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வேலணைப் பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்திட்டங்கள் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவதானம் செலுத்தியிருந்த அதேவேளை சபையின் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் துறைசார்ந்தொரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தொழில்வாய்ப்பு கேட்பதால் இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் போல் கூ...
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஈ.பி...
தமிழ் மக்கள் மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தோற்றுவித்தவர்கள் நாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! 

காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?
கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? - நாடாளும்றில் டக்ளஸ் எம்.ப...
விவேகம் இல்லாத வீரத்தின் விளைவுகளையே மக்கள் அனுபவிக்கின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!