எமது வழிமுறைக்குள் வந்தவர்கள்  பொறிமுறைக்குள்ளும் வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 12th, 2016

இன்று சில மாற்றங்கள் அதிசயமாகவே நடந்திருக்கின்றது. நாம் முன்னெடுத்து வந்த எமது மதி நுட்ப சிந்தனையின்  இணக்க அரசியல் வழி நோக்கி சக தமிழ் கட்சி தலைமைகளும்
வந்திருக்கின்றன. காலம் தாழ்த்தி வந்திருந்தாலும் வரவேற்கிறோம்.

ஆனாலும் வழிமுறைக்கு வந்தவர்கள் பிரச்சினைகளை  தீர்க்கும் பொறிமுறை நோக்கியும் வரவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதன் மூலம்  தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு  தீர்வு காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தமிழ் பேசும் தரப்பு தாம் பெற்ற அரசியல் பலத்தை  பயன்படுத்தி அரசாங்கத்தின் நல்லெண்ண முயற்சிகளை  துரிதப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.

பதின் மூன்றாவது திருத்தசட்டத்தை முழுமையாக  நடை முறைப்படுத்துவதில் ஆரம்பித்து,…

அதிலிருந்து எமது அரசியல் இலக்கை நோக்கி செல்வதே  எமது யதார்த்த பூர்வமான அரசியல் நிலைப்பாடு என்பதையே  நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்திருந்தாலும்,….

இன்று அரசாங்கம் முன்னெடுத்துவரும் புதிய அரசியல்  யாப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியல்  அபிலாசைகளை தீர்க்கும் முயற்சிகளுக்கு நாம் என்றும் பக்க பலமாகவே இருப்போம்.

எந்த வழிமுறையாக இருப்பினும் சாத்தியமான வழிமுறையில்  எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு விரைவாக  தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts: