எமது நிலைப்பாட்டை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புபவர்களை அரவணைத்துச் செல்லத் தயார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 27th, 2021

எமது மக்களின் அபிலாசைகள் தொடர்பாக எமது நிலைப்பாட்டினை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். அதனை ஏற்று எம்மோடு பயணிக்க விரும்புகின்றவர்களை அரவணைத்துச் செல்லத் தயாராக இருக்கின்றோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவதற்கு இந்தியா அழுத்தத்தினை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு சக தமிழ் பேசும் கட்சிகள் சில ஒன்றிணைந்து பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக குறித்த கலந்துரையாலில் கருத்து தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

000

Related posts:

விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள...
விவசாயத்துறை இன்னும் சில காலங்களில் தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ...
பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைம...