உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராம விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Tuesday, September 6th, 2022


உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்தில் அமைக்கப்படடுள்ள மீனவர் இறங்கு துறை மற்றும் மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ள காணி விவகாரம் தொடர்பாக நிலவி வருகின்ற நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

சம்மந்தப்பட்ட காணி தனியார் சிலரினால் உரிமை கோரப்பட்டு வருகின்ற நிலையிலேயே இப்பிரச்சினை ஏற்படுள்ளது. இதுதொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அதிகாரிகள் கடந்த வாரம் நேரடிக் கள விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில், வர்த்தக அமைச்சர் நளின் பெனார்ந்து, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் உட்பட சம்மந்தப்பட்ட தரப்புக்கள் கலந்துகொண்டன. – 06.09.2022

Related posts:


ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களின் மாடமாளி கைகளுக்கென அறவிடப்படு கின்றனவ...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்கள் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம் - அமைச்சர் டக்ள...