உருண்டோடிக்கொண்டிருக்கும் உருழைக்கிழங்குகளால் தமிழ் மக்களின் உரிமைகளை பெறமுடியாது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, May 11th, 2024

நீரின் ஊடாக நெருப்பையும் கொண்டு செல்லும் ஆற்றல் உள்ளவர்கள் ஈ.பி.டி.பியினர் என்ற அரசியல் அச்சம் காரணமாகவே ஆங்காங்கே பதுங்கியிருந்த சில தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து உருழைக்கிழங்கு மூட்டைபோன்று இறுகக்கட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்றை அன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கியிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புலிகள் அமைப்பின் தலைமை இல்லாதெழிந்து பின்னர் இன்று அந்த கூட்டமைப்பு என்ற உருழைக்கிழங்கு மூட்டை கட்டவிழ்ந்துவிட்டதுடன் திக்குத்திசை தெரியாது ஊருண்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறானவர்களால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதுவித விமோசனங்களும் கிடைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்

அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வலிகாமம் மேற்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் வடக்கு. வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்கு ஆகிய  பிரதேசங்களை உள்ளடக்கிய கட்சியின் பொறுப்பாளர்கள் வட்டார செயலாளர்கள் வட்டார நிர்வாக உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு இன்று சுன்னாகத்திலுள்ள தனியார்  மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்  தெரிவிக்கையில்,

1987 களின் பிற்பகுதியில் ஆயுதப் போராட்டம் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கு சாத்தியமற்றதென முடிவெடுத்து நாம் அரசியல் ஜனநாயக நீரோட்டத்தில் காலெடி வைத்தபோது சிலர் எம்மை கேலி செய்து எள்ளி நகையாடியிருந்தனர்.  ஆனாலும் நாம் அதற்கு செவி சாய்த்திருக்கவில்லை.

இந்த ஜனநாயக வழிமுறையின் ஊடாக 1994 களில் நாம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 9 நாடாளுமன்ற உறுப்பினர்களாக அதாவது யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் 9 மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் சென்றிருந்தபோது அவ்வாறு ஏழனம் செய்தவர்கள் கூனிக் குறிகிப்போயினர்

இவ்வாறாக சாத்தியமான வழிமுறையூடாக நாம் முன்னெடுத்த பொறிமுறையின் வெற்றியால் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் எம்மை நோக்கி அணிதிரளத் தொடங்கியிருந்தனர்.

இதை சற்றும் எதிர்பார்த்திராத பிரபாகரன் எமது அரசியல் வளர்ச்சியை கட்டு அச்சமுற்று தன்னால் அச்சுறுத்தலுக்குள்ளாகி ஒளிந்திருந்த தமிழ் தரப்பினரை அழைத்து தமது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும் வகையிலான கட்டமைப்பாக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.  

இந்த கட்டமைப்பு உருவாக்கப்பட்டதும் எம்மை அரசியல் ரீதியில் வெற்றிகொள்ள முடியாதென தெரிந்திருந்த நிலையில் எம்மீது அதிகளவான சேறு பூசல்களையும் அவமானங்களையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து மக்களிடையே பிரசாரங்களை தீவிரமாக முன்னெடுத்து தமது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்து கொண்டிருந்தனர்.

அனால் “உண்மை வெகுநாள் உறங்காது” என்பது போன்று 2009 இல் புலிகள் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் அந்த கூட்டமைப்பு தமது சுயரூபங்களை காட்டத் தொடங்கியுள்ளது மட்டுமல்லாது அதன் உண்மை முகங்களும் மக்களிடையே வெளிப்பட தொடங்கியது.

அத்துடன் யுத்தத்தால் நொந்துபோயிருந்த தமிழ் மக்களை தமது சுயநலங்களுக்காக மீண்டும் பகடைக்காய்களாக பயன்படுத்த தொடங்கினர் கூட்டமைப்பினர். இதன்காரணமாக மீண்டும் மக்கள் அவலங்களை சந்திக்க நேரிட்டது.

ஆனால் ஈழ மக்கள் ஜநயாககக் கட்சியாகிய என்றும் எமது கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறியது கிடையாது. அதனால்தான் ஈ.பி.டி.பி. ஆகிய நாங்கள், எமது மக்களுக்கு சரியான வழியை காட்டுகின்ற தனித்துவமான தரப்பாக இருந்துவருகின்றது

இதேநேரம் எமது கொள்கைகள் தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் சக்தி யாகவும் உள்ளது. மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினைகள்முதல் அபிவிருத்தி உள்ளடங்கலான அரசியல் தீர்வு வரையிலான மூன்று ‘அ’ க்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகளை முன்வைக்க முடியும் என்று நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

அதுமட்டுமல்லாது கடந்த பல வருடங்களாக பல்வேறு விடயங்களில் எமது முன்னகர்வுகள் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கு நாம் கட்டி வளர்த்துள்ள தேசிய நல்லிணக்கமும் கணிசமான பங்களிப்பை செய்திருக்கிறது.

இதேநேரம் தமிழ்  மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவலங்களையும் அரசியல் கோஷங்களாக பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் தரப்புக்கள், தமது நலன்களுக்காக  தமிழ் மக்களை இன்னுமொருமுறை பலிக்கடாவாக்க முனைகிறார்கள்.

இவ்வாறான அறிவிலித்தனமான முயற்சிகள் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட குழுக்களினாலும் மிதவாத தமிழ் தலைமைகளினாலும் பலமுறை முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவற்றினால் எமது மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. மீளமுடியாத பின்னடைவுகளையே ஏற்படுத்தியிருந்தன.

அந்தவகைளயில் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. தற்போது கிடைக்கவுள்ள இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! - டக்ளஸ் தேவானந...
ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை ...
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு - அமைச்சர் டக...