நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, May 29th, 2022

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே வேலனை, புங்குடுதீவு, ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த பயனாளர்களுக்கு முதற் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் நிதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  பகிர்ந்தளித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பைக் கொண்டுள்ள கடலட்டை உற்பத்தியை வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஊக்குவித்து, பிரதேச மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை  உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில், ஆரம்ப முதலீடு தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு, கடற்றொழில் அமைச்சின் களப்பு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நிதியுதவியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: