உயர்தரமாக தரமுயர்ந்தது ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை – பாடசாலை சமூகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை தரம் 1-13 வரையான 1C பாடசாலையாக இன்று தரமுயர்த்தப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்  மேரிசன் திரேஸ் மேரி கனிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவக வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் ,  வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இளங்கோவன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி, பிரதேச சபையின் தவிசாளர் ஜெயகாந்தன் வேலனை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி ஈழ மக்கள் ஜனநயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1872 இல் ஆரம்பித்த மேற்படி பாடசாலை, இவ்வாண்டு 150 ஆண்டினை பூர்த்தி செய்வதுடன் பாடசாலை சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பாடசாலையை தர்முயர்த்த முழு முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்த பாடசாலை அதிபர், ஆதற்காக அமைச்சருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்தார்

Related posts:

தேர்தல் முறை மாற்றம் என்பது மக்கள் நலன்சார்ந்ததாகவே அமையப்பெறல் வேண்டும் - ஊடக சந்திப்பில் டக்ளஸ் தே...
நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அவர்க...