அமைச்சர் டக்ளஸ் விடா முயற்சி – சாந்தன் மீண்டும் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Tuesday, February 6th, 2024

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இருநாடுகளிலும் இருந்து சாந்தன் இலங்கை திரும்புவதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அவர் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என்பதுடன், இலங்கை அரசாங்கம் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, எந்த சந்தர்ப்பத்திலும் சாந்தனுக்கு நாடு திரும்ப முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடந்த 30.01.2024 ஆம் திகதியன்ங சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திரந்தார்.

இதையடுத்து ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் கவனத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்திருந்தார்.

இதையடுத்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தனை அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுடிருந்தார்.

இந்நிலையிலேயே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் எனப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராசா மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே கடந்த நவம்பர் 27 ஆம் திகதி புலிச் சின்னம் அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று  அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
கௌரவமான நீதியைப் பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் காணாமல் போனோரின்; உறவினர்கள் க...
தேசிய தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந...