உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும்
 Monday, October 9th, 2017
        
                    Monday, October 9th, 2017
            
வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்டடிருந்த நிலையில், தற்போது 3 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், தம்மை மீண்டும் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இன்று (09.10.2017) காப்புறுதித் தொழில் ஒழங்குபடுத்தல் சட்டதிருத்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,உண்ணாவிரதப் போராட்;டத்தில் ஈடுபட்டுவரும் 3 கைதிகளும் தம்மை விசாரணைகளே இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. அநுராதபுரத்தில் தமது வழக்கு நடைபெற்றால் தாம் மொழிப் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், வவுனியாவில் தமது வழக்கு நடைபெற்றால் தமது நியாயத்தை அல்லது சாட்சியத்தை தமிழ் மொழியில் முன்வைப்பதற்கு வசதியாக இருக்கும் என்றும் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் ஆராய்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்க விருப்பத்தை எமது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        