ஈ.பி.டி.பியின் பெயரை அவதூறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ஊடகப்பிரிவு அறிவிப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரை பயன்படுத்தி அரச தொழில் வாய்ப்புக்கள், சலுகைகளை பெற்றுத்தருவதாக கூறி நிதி அல்லது சலுகைகளை பெற்றுக்கொள்ளும் சமூகவிரோ செயற்பாடுகளில் யாராவது ஈடுபட்டால் அது தொடர்பில் தயக்கமின்றி உடகனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து உரிய தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது கட்சி, தனது அரசியல் பயணத்தில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கு பல்துறை சார்ந்த அரச பணிநிலைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்திருந்திருக்கின்றது.
எமது கட்சியின் இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சேவையை கடந்த காலங்களில் சிலர் தவறாகப் பயன்படுத்தி எமது கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டு வந்ததாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் அவ்வாறு எமது கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் செயற்பட்டதும் கிடையாது செயற்படப் போவதும் கிடையாது என தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகள் எமது கட்சியின் கொள்கையோ அல்லது வேலைத்திட்டமோ கிடையாது என்பதையும் மீண்டும் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
ஆனாலும் இத்தகைய முறைப்பாடுகள் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே இத்தகைய செயற்பாடுகள் ஏதேனும் நடைபெற்றால் அதுதொடர்பில் உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்து உரிய தீர்வை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Related posts:
|
|