ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முஸ்லிம்களுக்கான கிளை அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Monday, July 20th, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முஸ்லீம்களுக்கான கிளை அலுவலகம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

குறித்த நிகழ்வு இன்றுமாலை இலக்கம் 64, முஸ்லிம் கல்லூரி வீதி, சோனகர் தெரு யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் திறந்துவைக்கப்பட்டது.

முன்பதாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து நீண்டகாலம் தாம் யாழ்ப்பாணத்திற்கு மீளக்குடியேறியுள்ளபோதும் தமது எதிர்காலம் தொடர்பில் தமது சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் எவரும் அக்கறைகொள்ளாமையால் தாம் நிர்க்கதியாகவுள்ளதாகவும் தமது எதிர்கால வாழ்க்கையை சிறப்பானதாக அமைப்பதற்கு எதிர்வரும் காலங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழியை தாம் பின்பற்றவுள்ளதாகவும் தெரிவித்து தங்களுடைய ஆதரவினை தெரிவித்திருந்தனர்

அந்தவகையில் இன்றையதினம் அதற்கான ஏற்டுபாடுகளை மேற்கொண்டிருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் அலுவலகத்தை திறந்துவைத்ததுடன் முஸ்லிம் மக்கள் வளம்பெற வேண்டுமானால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியியின் பலம் ஓங்கவேண்டும் என்றும் அதற்காக வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் ஒன்றுதிரண்டு அமைச்சரல் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வாக்களிக் அணிதிரளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

Related posts:

யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ...
அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை - பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்ற...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் !

நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட...
யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவா...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முழுமையாக விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் - தேர்தல் முறை மாற்றம்...