நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 26th, 2017

இலங்கை முதலீட்டாளர்கள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பின்வாங்கும் ஒரு நிலையில். வெளிநாட்டு முதலீட்டாளர் பற்றி மேலும் கூற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கின்றேன். எனவே நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் ஏற்றுமதிகள், இறக்குமதிகள் , சேர் பெறுமதி வரி, உற்பத்திகள் வரி மற்றும் காணி சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இங்கே உற்பத்தி வரிகளைப் பற்றிப் பேசுகின்றோம். உண்மையில் பார்க்கப் போனால், உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டு, அதன் மூலம் அதிகரிக்கின்ற வருமானங்களின் அடிப்படையில் மக்களிடமிருந்து பெறப்படுகின்ற வரியை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். எனினும், அவ்வாறான ஒரு நிலை – அதாவது உற்பத்திகள் அதிகரிப்பினை காண முடிகின்ற நிலை இங்கு இருக்கின்றதா? அதுவும் இல்லை என்கின்ற நிலையில், அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்புகள் இல்லாத நிலையில் விதிக்கப்படுகின்ற – அதிகரிக்கப்படுகின்ற வரிகளால் அரசு எதிர்பார்க்கின்ற இலக்கை எட்டுவது சிரமமான காரியமாகும்.

உதாரணமாக, உருளைக்கிழங்கு எமது நாட்டில் அறுவடை செய்யப்படும் காலங்களில் அதன் இறக்குமதி வரியை அதிகமாக அதிகரித்தும், எமது உற்பத்திகளின் அளவு மற்றும் நுகர்வுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதன் இறக்குமதியை மட்டுப்படுத்துமாறும் நான் பல தடவைகள் இங்கு வலியுறுத்தி வந்துள்ளேன்.  ஆனால், அந்தக் கோரிக்கைகூட ஒழுங்காக ஏற்று நடைமுறைப்படுத்தாத நிலையில், இன்று சந்தையில் உள்ளூர் உற்பத்தி உருளைக்கிழங்கின் விலை அதிகரித்தும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்கின் விலை மிகக் குறைந்தும் காணப்டுகின்றது. இந்த நிலையில், உள்ளூர் உற்பத்திகளை எபபடி அதிகரிக்க முடியும்? உற்பத்திகளுக்க வரி விதிப்பதற்கு முதல், உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும்.

நிறுவனங்களைப் பதிவு செய்கின்ற வருடாந்தக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்படுவதற்குப் பதிலாக முடக்கப்பட்டுள்ள ஒரு நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம், நேரடி வரிகள் குறைக்கப்பட்டு, மறைமுக வரிகள் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், சாதாரண பொது மக்களே அதிகமான பாதிப்புகளுக்கு உட்படுகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts:

வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம...
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவா...

அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
சவுதியில் நிர்க்கதி நிலையிலுள்ள பெண் தொழிலாளர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு –  டக்ளஸ் எம்.பி நட...
மன்னார் புதைகுழியில் அதன் உண்மையையும் புதைத்துவிடாதீர்கள் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் சுட்டிக்காட...