அனைத்து கட்சிகளை நோக்கியும் எமது மக்களுக்கான நேசக்கரத்தை நாம் நீட்டி நிற்கிறோம் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 22nd, 2019

2000ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்கான கால கட்டத்தில் தான் “அரசியலமைப்புப் பேரவை” என்ற வார்த்தைப் பிரயோகம் வழக்கில் வந்தது. இந்த ஏற்பாட்டை நாம் “அரசியலமைப்புப் பேரவை” என்று அழைக்கலாம். அன்றைய புதிய யாப்பிற்கான நகலைப் பார்வையிட்ட அரசியல் பேராசிரியர் ஒருவர் எனது நண்பனுக்கு கனடாவிலிருந்து எழுதிய கடிதத்தில், “நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் இந்த அரசியலமைப்புப் பேரவையானது பாகிஸ்தானில் உள்ள ஐளுஐ நிறுவனமாக மாற்றம் பெற இடமுண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பேராசிரியர் நமக்குத் தெரிந்தவர்தான். தற்போது அவர் உயிரோடு இல்லை. அவர்தான் பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன். தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களது மருமகனாவார்.

பேராசிரியர் வில்சன் எச்சரித்தது போல், இன்று அரசியலமைப்புப் பேரவை ஒரு ஐளுஐ நிறுவனமாக மாறிச் செயற்படுவதைப் பார்க்கலாம். இது 70 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியர் ஒருவரால் பாகிஸ்தானில் ஆரம்பித்து வைத்த உளவுத் துறையாகும்.
இந்த அரசியலமைப்புப் பேரவை (ஊழளெவவைரவழையெட உழரnஉடை) மற்றும் அரசியலமைப்புச் சபை (ஊழளெவவைரவழையெட யுளளநஅடிடல) ஆங்கிலத்தில் அவை சரியான அர்த்தத்தைக் கொடுத்தாலும் தமிழில்; அது ஒரு குழப்பத்தையும் மயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு அதைக் கவனத்திலெடுத்து ஆராய்ந்து ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
2000ஆம் ஆண்டில் உருவாக்க உத்தேசித்த அரசியல் யாப்பில், அரசியலமைப்புப் பேரவை என குறிப்பிடப்பட்டதில் எவை உள்ளடங்கியுள்ளதென்பதை நாம் பார்க்க வேண்டும். அதில் 08 ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு உரிய பெயர்களை அரசியலமைப்புப் பேரவை விதப்புரை செய்தல் வேண்டும். அத்துடன், சட்டமா அதிபர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், ஓம்பூட்ஸ்மன், கணக்காளர் நாயகம் ஆகிய நான்கு பதவிகளுக்கும் தகுதியானவர்களின் பெயர்களுக்கு ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்னதாக அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் அளித்தல் வேண்டும்.
அந்த 2000ஆம் ஆண்டு உத்தேச அரசியல் அமைப்பில், அமைப்புப் பேரவைக்கும் நீதித்துறைக்கும் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை. ஆயினும், 2000ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பு மசோதா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் காலாவதி ஆகியதை நாம் எல்லோரும் அறிவோம்.
இந்த இடத்தில் போலித் தமிழத்; தேசியம் பேசுவோர் தமிழ் பேசும் மக்களுக்கு செய்திருந்த வரலாற்றுத் துரோகத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட்ட அதிகாரங்களோடு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, மத சார்பற்ற, இரு மொழிக் கொள்கையுடைய பிராந்தியங்களின் சுயாட்சி என்ற தீர்வு யோசனையை அன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனாலும்,.. வரலாற்றில் எப்போதும் இல்லாத, இனியும் சாத்தியப்பட்டு வருமோ என்று சொல்ல முடியாத சமஸ்டிக்கு நிகரான அந்தத் தீர்வை எதிர்த்தவர்கள் யார் என்று கேட்கிறேன்.
தமிழர்களுக்கான அந்த அரியதொரு தீர்வை எதிர்த்தவர்கள் அன்றைய எதிர்க்கட்சி மட்டுமென்றால்,.. அது என்றுமே உள்ள ஆளுங்கட்சி எதிர்க்கட்சி முரண்பாடு என்று நாம் விட்டு விடலாம். ஆனாலும் தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் தீர்வை, அன்றைய எதிர்க்கட்சியைத் தூண்டி அவர்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எரித்து கொளுத்தியவர்கள் வேறுயாருமல்ல.
அடுத்தடுத்து வரும் தேர்தல்களில்கூட மக்களை கஞ்சா போதை போல் மயக்க திட்டமிட்டு, இன்னமும் தமிழர்களின் உரிமை குறித்து போலியாக கூச்சலிட்டு வரும் கூட்டமைப்பு கோடரிக்காம்புகளே என்பதை எமது மக்கள் இன்று உணரத் தொடங்கியுள்ளார்கள். கோடரிக்காம்புகள் என்பதற்கு அர்த்தமான பேர்வழியினர் கூட்டமைப்பினரே என்பதற்கு பல வரலாற்று துரோகங்களில் இதுவும் ஒரு சாட்சியாகும்.
அன்று தமிழர்களுக்கு கிடைத்த அரசியல் தீர்வை எதிர்த்துக் கெடுத்தார்கள். இன்று தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த அதனைவிட நலிவான புதிய அரசியல் யாப்பை ஆதரித்துக் கெடுத்திருக்கிறார்கள்.
இவர்கள் பொறுப்புள்ள ஒரு அரசியல் தலைமையாக இருந்திருந்தால் ஆளும் கட்சி எதிர்க்கட்சி முரண்பாடுகளுக்குள் இந்த கோடரிக்காம்புகள் நுழைந்திருக்க மாட்டார்கள்.
இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டுச் சிக்கலை எடுத்துக்கொண்டால் தமிழர் தரப்பு ஆளும் கட்சியுடன் மட்டுமன்றி எதிர்கட்சியுடனும் உறவுகளை தொடர்புகளைக் கொண்டிருக்கவே வேண்டும். ஆனாலும் இங்கே என்ன நடந்திருக்கிறது?…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் இந்நாள் ஜானாதிபதியும், இன்றைய பிரதமரும் ஒரே நிகழ்வுகளில் ஒன்றாகக் கை கோர்த்து சகோதர வாஞ்சையோடு கலந்து கொண்டு மகிழ்கின்றார்கள்.
ஆனாலும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள், எதிர்க்கட்சியோடு தமது சுயலாபங்களுக்காக முட்டி மோதி பகைப்பட்டு எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் தீர்விற்கே தடையாக இருந்து வருகிறார்கள், எமது மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி தமது தொடர்ந்தும் தமது நாற்காலிகளை அபகரிக்க நினைக்கிரார்களா? அல்லது தமது சட்ட வல்லுமைகளை சுயலாபம் கருதி ஆளும் அரசுக்கு சாதகமாக்கி, கிடைக்க வேண்டிய அரசியல் தீர்வை கிடைக்காமல் செய்கின்றார்களா?.. தமது சட்ட வல்லுமைகளை தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக இவர்கள் பயன்படுத்துகிறார்களா?.. அல்லது… தத்தமது சலுகைகளைப் பெறுவதற்காக இவர்கள் ஆளும் அரசின் அடிவருடிகளாக செயற்பட முனைகிறார்களா?… எம்மை பொறுத்த வரையில்,. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மட்டுமன்றி தென்னிலங்கையின் அனைத்து கட்சிகளை நோக்கியும் எமது மக்களுக்கான நேசக்கரத்தை நாம் நீட்டி நிற்கிறோம்.
எம்மிடம் இருப்பது எமது ஆத்தம பலம் ஒன்றுதான். தமிழ் பேசும் மக்கள் இலங்கை தீவின் இறமைக்கு ஒருபோதும் எதிரானானவர்கள் அல்ல. ஒன்று பட்ட இலங்கையில் எமது மக்களுக்கு இருக்க வேண்டிய இறையாண்மையை மட்டுமே தமிழ் பேசும் மக்கள் விரும்புகின்றார்கள். அதற்காக நாம் தென்னிலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும். தென்னிலங்கை சகோதர மக்களுக்கும் எமது உறவுக்கங்களை சகோதர வாஞ்சையோடு உறுதியாக நீட்டுகின்றோம்.
2000ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அமுலுக்கு வந்த 17ஆம் திருத்தத்தை நோக்குவோமாயின் அத்திருத்தத்தின்படி, 07 ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பதற்கு அரசியல் யாப்புப் சபையின் விதப்புரை அவசியமாயிருந்தது.
அத்துடன், பிரதம நீதியரசர் உட்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டுத் தலைவர் உட்பட்ட நீதியரசர்கள், நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்னதாக யாப்பு பேரவை அங்கீகாரம் அளித்தல் வேண்டும்.
2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் நீதித்துறை நியமனங்கள் அரசியலமைப்புப் பேரவையுடன் தொடர்புபடுத்தப்பட்டது. மேலும், சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், ஓம்பூட்ஸ்மன், நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம், ஆகிய 5 பதவிகளுக்குமான அங்கீகாரத்தை அரசியலமைப்புப் பேரவை வழங்கிய பின்னரே ஜனாதிபதி நியமனங்களைச் செய்தல் வேண்டும்.
2010ஆம் ஆண்டு செப்டெம்பர் அமுலுக்கு வந்த 18ஆம் அரசியல் யாப்புத் திருத்தத்தில் “அரசியலமைப்புப் பேரவை” என்பது “நாடாளுமன்ற சபை” என்று பெயர்மாற்றம் பெற்றது.
அது மட்டுமல்லாது, 7 ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், பிரதம நீதியரசர் உட்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு தலைவர் உட்பட்ட நீதியரசர்கள், நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள், சட்டமா அதிபர், கணக்காளர் நாயகம், ஓம்பூட்ஸ்மன், நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம், ஆகிய நான்கு பதவிகளுக்குமானவர்களை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்னராக “நாடாளுமன்ற சபை” தனது “அவதானிப்புகளை” மட்டும் கொடுத்தல் வேண்டும் எனத் திருத்தப்பட்டது.

Related posts:

பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்த...
பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கிழக்கி்ன் ஆ...
வடக்கின் கடற்பரப்பை கண்காணிக்க கடல் சாரணர் படையணி! அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைப்பத்திரம்!