இறந்தவர்களை நினைகூருவதில் தவறில்லை – அரசியலாக்குவதே தவறு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021

இறந்தவர்களை அவர்களுடைய உறவினர்கள் நினைவுகூருவதில் தவறேதும் இல்லை. ஆனால் அதனை அரசியல் நடவடிக்கையாக முன்னெடுப்பதுதான் பிரச்சினையை உருவாக்கி விடுகின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருந்தது. தற்பொழுது மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நீதிமன்ற தடையுத்தரவுகளை பொலிசார் பெற்று வருகின்றனர்.

இது தொடர்பில் அமைச்சர் என்ற வகையில் என்ன தெரிவிக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ஆட்சிக்கு ஆட்சி மாற்றங்கள் உள்ளது. இப்பொழுது பார்த்தீர்களெனில், அந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் அன்று அரசாங்கத்திறகு எதிரான கோசத்தில் நந்தி ஒழிக என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

நந்தி என்பது தமிழ் மக்களுடையதும், இந்து மக்களுடையதும் அங்கிகரிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு சின்னம்.

ஆனால் இவர்கள் நந்தி ஒழிக என்று போட்டுள்ளார்கள். அவர்கள் நாட்டையும், மக்களையும், தவறாக வழிநடத்த முற்படுவதாகதான் அன்றும் மேற்கொண்டிருந்தார்கள்.

ஆனால், இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவுகூர்வதும், அதற்காக பிரார்த்தனை செய்வதெல்லாம் பிரச்சினை அல்ல. இதை ஒரு அரசியல் நடவடிக்கையாக முன்னெடுக்கும் போதுதான் பிரச்சினைகள் வரும். வந்தும் உள்ளது. இதைதான் அன்றுமுதல் நான் சொல்லி வருகின்றேன் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் அவலப்படுபவர்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப...
மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
தேர்தல் கால ஐக்கியத்தை இனியும் நம்ப எமது மக்கள் தயாராக இல்லை – விஷேட சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவ...