இன்னமும் மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமே – பூநகரியில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற யுத்த சூழல் முடிவுக்கு வந்;துள்ள போதிலும் கூட எமது மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமான விடயமாகவே நோக்க முடிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பூநகரி கிராஞ்சி பகுதி மக்களுடனான இன்றைய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இந்நாட்டில் கொடிய யுத்தம் நிலவிய காலப்பகுதியில் எந்த நேரத்திலும் என்னவும் நடக்கலாம் என்ற நிலையில் எமது மக்கள் நாளாந்தம் அச்சத்துடனும் ஏக்கத்துடனும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், யுத்தம் முடிவுக்குவந்த நிலையிலும் கூட மக்களின் வாழ்வில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களுடனான நிம்மதியான கௌரவமான வாழ்வு கிடைக்காமல் போனமையானது ஒரு துரதிஸ்டவசமான விடயமாகவே நோக்கவேண்டியுள்ளது.
பலமுன்னேற்றகரமான மக்களின் வாழ்வியலுக்கு தமிழ்; அரசியல் தலமைகளின் தவறான வழிநடத்தலும் ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கின்றது.
இதன் காரணமாக எமது மக்கள் இற்றைவரையிலும் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தை முனனெடுக்க வேண்டிய அவல நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் கவலையளிக்கின்ற விடயமாக இருக்கின்றது.
இன்றும் எமது மக்கள் சுயபொருளாதாரத்திலோ அன்றி வேலைவாய்ப்பு விடயத்திற்காகவோ ஏங்கும் நிலை தொடரும் அதேவேளை ஒரு கௌரவமான நிம்மதியான வாழ்வையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதற்காக இன்றும் கூட எமது மக்கள் ஒளிமயமான எதிர்காலத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அவர்களது எதிர்பார்ப்புக்களிற்கும் காத்திருப்புக்களிற்கும் உரிய தீர்வு கிடைக்கவேண்டுமானால் மக்கள் எமக்கு ஒன்றிணைந்த அரசியல் பலத்தை தருவார்களேயானால் நாம்; நிச்சயம் ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் நாம் பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே புநகரி தேரவில் பிரதேச மக்களையும் சந்தித்த செயலாளர் நாயகம் அப்பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை துறைசார் தரப்பினருடன் பேசி தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
Related posts:
|
|