இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றது.
புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றிருந்தார்.
இந்நிலையில் தனது அமைச்சின் கீழ் உள்ள இந்துமத திணைக்களத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை சந்தித்த அவர் முன்னைய ஆட்சியில் இந்துமத விவகாரங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட வேலைகள் தொடர்பாகவும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் இந்துமத திணைக்களத்தின் ஊடாக எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் அதற்கான தனது ஆலோசனைகளையும் இதன்பொது அவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|