இந்திய தனியார் முதலீட்டாளர் பங்களிப்பு – கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Friday, October 14th, 2022

இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் ஒலைத்தொடுவாயில்  அமைந்துள்ள கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில்  இன்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையம் மற்றும் குஞ்சு பராமரிக்கும் நிலையம் போன்றவற்றிற்கான இந்திய தனியார் முதலீட்டாளர்களின் அனுபவத்தினையும் நவீன தொழில்நுட்பத்தினையும் பயன்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவின் முயற்சியில் உருவாக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

மன்னார், ஓலைத்தொடுவாயில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தின் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்ட இந்திய தனியார் முதலீட்டாளர்கள், குறித்த நிலையத்தின்  உற்பத்தித் திறனை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளூராட்சி தேர்தலை சரியான முறையில் பயன்படுத்துங்கள் - கிளிநொ...
சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் - கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் ...
இந்தியாவின் இலங்கைக்கான தூதுவர் சந்தோஸ் ஜா - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு - இந்தியா- இலங்கை இ...