இணைய சேவையை கல்வித்துறை சார்ந்தோர் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 9th, 2016

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரையில் இணைய வசதி என்பது அனைத்து தரப்பினருக்கும் அத்தியவசியமான ஒன்றாகவே வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது பாடசாலை மாணவர்கள் உட்பட உயர் கல்வித்துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டும், மேலும் வழங்கப்படவும் உள்ள நிலையில், இணைய சேவை வழங்குநர்கள் அதிக இலபாத்தை ஈட்டும் நோக்குடனேயே அச் சேவையை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் அதற்கான வரிகளும் அதிகரிக்கப்படுகின்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. எனவே, இதனை குறைந்த விலையிலும், இலகுவாகவும் கல்வித்துறை சார்ந்தோர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தொடர்பான குழுநிலை கலந்துகொண்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

தற்போது சில நகரங்களில் குறிப்பிட்ட சில  பொது இடங்கள் சார்ந்து இணைய வசதி (WIFI) வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், அது மிகவும் குறைந்த வேகத்தில் செயலாற்றுவதால், அதன் வேகத்தை அதிகரிப்பதற்கும், அச் சேவையை மேலும் பல பொது இடங்கள் இனங்காணப்பட்டு விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கௌரவ அமைச்சர் ஹரீன் பீரிஸ் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

012

Related posts: