ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!

Wednesday, September 8th, 2021

ஆழ்கடல் மீன்பிடி பலநாள் கலன்களுக்கான வி.எம்.எஸ். கண்காணிப்பு உபகரணங்கள் படகு உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவினால்  கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று (08.09.2021) கொழும்பு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில்  நடைபெற்றது. 

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட படகு கண்காணிப்பு உபகரணங்களை படகு உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முதற்கட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சுமார் 6500 ஆழகடல் பலநாள் மீன்பிடி கலன்கள் பயன்பாட்டில் இருக்கின்ற நிலையில் அனைத்து  மீன்பிடிக் கலன்களுக்கும் கண்காணிப்பு கருவிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்குகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், vessel monitering system(வி.எம்.எஸ்.) கருவிகளை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் எல்லை தாண்டிச் செல்லுதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய தேவையற்ற அசௌகரியங்களை தடுப்பதுடன் மீனகள் செறிந்து வாழும் பிரதேசங்களை அடையாளம் கண்டு கொள்ளவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

சர்வதேச கடலில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீன்பிடிக் கலன்களில் வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்பட வேண்டும் எனபது சர்வதேச நியமங்களில் ஒன்றாக ஒருக்கின்றது.

இந்நிலையில் குறித்த மீன்பிடிக் கலன் உரிமையாளர்களினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நடைமுறையில் இருந்த குறித்த கண்காணிப்பு பொறி முறையை வினைத் திறன்மிக்கதாக மாற்றித் தருமாறும் அனைத்து கலன்களுக்கும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், ஐ.எம். ஓ. எனப்படும் சர்வதேச நிறுவனம் மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இச்செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை - ஊடகவியலாளர் சந்த...
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உ...