ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம் – அமைச்சர் டக்ளசின் சரியான அரசியல் வழிநடத்தலால் சாத்தியமானது என நிர்வாகிகள் சுட்டிக்காட்டு!

Wednesday, April 17th, 2024

பளை பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த மாதம் 9 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக குறித்த பல நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சரியான அரசியல் வழிநடத்தலால் தான் இது சாத்தியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்பதாக குறித்த அமைவிடத்தில் எரிபொருள் நிலையம் ஒன்றின் அவசியம் குறித்து பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அடிக்கல் நாட்டி வைத்ததுடன்,  பல்வேறு நடைமுறை சிக்கல்களை களைந்து கடந்த மார்ச் 9 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்தும் வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் கடந்த ஒரு மாத வருமான ஈட்டல் 3 இலட்சம் ரூபாய் என நிர்வாகிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

முன்தாக குறித்த எரிபொருள் நிலையத்தை திறந்துவைத் நிகழ்வின்போது அமைச்சரின் தலையீட்டினால்தான் எரிபொருள் நிலைய திறப்பு சாத்தியமானது என்றும்  சரியான அரசியல் வழிநடத்தில் இருந்தால் எதுவும்’ சாத்தியமாகும் என்றும் கருத்து அப்பகுதி மக்களும் துறைசார் நிர்வாகிகளும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் கிளிநொச்சி மாவட்ட விசேட மாநாடு ஆரம்பம்!
மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது...

மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை - நாடாளுமன்றத்தில் டக...
சூரிய மின் உற்பத்தி தொடர்பில் மக்கள் ஏன் ஈடுபாடு காட்டவில்லை என்பது தொடர்பில் எப்போதாவது ஆராய்ந்து ப...
யாழ் மாவட்ட வறிய மக்களின் மீளெழுச்சிக்காக கடற்றொழில் அமைச்சால் பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்க நடவடி...