அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைப்பதாற்கான முகமூடிகளாகவே நான் பார்க்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, December 31st, 2020

நான் தேசிய ரீதியிலான அமைச்சராக இருப்பதுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுவின் தலைவராக செயற்படுகின்ற போதிலும் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் எமது பணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் எந்தவிதமான மாற்றங்களும் ஒருபோதும் ஏற்பட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

94 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தினை மையமாகக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் உங்களுக்கு யாழ்ப்பாணத்திறகான அபிவிருதிக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்காமை தொடர்பில் தேசிய ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இது தவறான ஒரு பார்வை என்பதே என்னுடைய கருத்து. நீங்கள் தெரிவிப்பது போன்று அந்தக் கால கட்டத்தில் நான் யாழ்ப்பாணத்தினை மையமாகக் கொண்டு செயற்பட்டது யுத்த சூழல் காரணமாகவேயாகும். அதற்காக எனக்கு ஏனைய பிரதேசங்களில் அக்கறை இல்லை என்று அர்த்தமல்ல.

தமிழ் மக்களின் தாயக பிரதேசம் என்று நான் வலியுறுத்தி வருகின்ற வடக்கு – கிழக்கு பிரதேசம் எங்கும் எனக்கு அக்கறையும் உரிமையும் இருக்கின்றது. எனினும் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல மக்கள் எனக்கு வழங்குகின்ற அதிகாரங்களுக்கு அமையவே என்னுடைய செயற்பாடுகளை விஸ்தரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2010 ஆண்டு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எமக்கு 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தின் பிரச்சினைகளைக் கையாளுவதற்கென்றே ஒருவரை முழுமையாக நியமித்திருந்தேன்.

அதேபோன்று இன்னும் பின்னோக்கி பார்த்தீர்களாக இருந்தால். 94 ஆம் ஆண்டு 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் பிரச்சினைகளை கையாளுவதற்காக முழுமையாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களை அந்நதந்த மாவட்டங்களில் தங்கி செயற்பட வைத்திருந்தேன்.

எனவே அரசியலில் பிரதேச ரீதியான சிந்தனை என்பது கையாலாகாத்தனங்களை மறைத்துக் கொள்ள பயன்படுத்துகின்ற முகமூடிகளாகவே நான் பார்க்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் எமது மக்கள் எதிர்கொள்ளுக்கின்ற அன்றாட பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வை காண்பதற்கு கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும் என தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நான் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழுவின் தலைவராக செயற்படுகின்ற போதிலும் யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் மக்களுக்கான பணிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்பட அனுமதிக்ககப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகவே நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் - டக்ளஸ் தேவானந்தா
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவி...
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...