அரசின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, July 30th, 2021

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையிலும் கடற்றொழில் அமைச்சின் வேலைத் திட்டங்களை முன்னகர்த்துவதற்கான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்றையதினம் நடைபெற்றது.

நாட்டை தற்போது அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் கடற்றொழில் அமைச்சினூடாக மக்கள் நலன்சார்ந்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான வேலைத்திட்டங்களை தாமதங்களோ அன்றி தடங்கல்களோ இன்றி மக்கள் தமது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு உரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படும் பொறிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவான புரிதலையும் இலகுவான நடைமுறைகளையும் ஏற்படுத்திக்’ கொடுப்பதற்கும் துறைசார் அதிகாரிகளூடாக குறித்த தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமான ஆலாசனைகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் - டக்ளஸ் எம்.ப...
கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வர்த்தமானி வெளியீடு - சட்ட திருத்தங்கள் தொட...
வெளிச்சமான பயணத்தில் மீண்டும் இருளுக்கு வித்திடுவது அவரவர் தத்தமக்கே கரி பூசிக் கொள்வது போன்றது –...

இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தால் அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் - டக்ளஸ் தேவானந்தா எம்....
சமுர்த்தி பயனாளிகளின் நலன்களுடன் உத்தியோகத்தர்களது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் - அமைச்சர் டக்...