வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019

நெல் சந்தைப்படுத்தல் சபையானது உரிய காலபோகங்களில் நெல் கொள்வனவிற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததன் காரணமாக விவசாய மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்படுவதுடன், தங்களது உற்பத்திகளை குறைந்த விலையில் தனியாருக்கு விற்கவேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தோடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இத்தகைய நிலையை மிக அதிகமாக வடக்கு மாகாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. நெல்லினைப் பெற்று மதுபான உற்பத்தி சாலைகளுக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த இச் சபையின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நாட்டில் அரசிக்கான தட்டுப்பாடுகளையும் கடந்த காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் சேவைகள் எவை எனப் பார்த்தால், தானியங்களை கொள்வனவு செய்தல், விற்றல், விநியோகித்தல் பகிர்ந்தளித்தல் என்றெல்லாம் கூறப்படுகின்றது. இந்தச் சபையானது இந்த நாட்டு விவசாய மக்களுக்கு இந்தச் சேவைகளை எல்லாம் செய்து வருகின்றதா? என்ற கேள்வி பொதுவாகவே எமது மக்கள் மத்தியில் எழுகின்றது.

இத்தகைய சேவைகளை இந்தச் சபை ஒழுங்குற நிறைவேற்றியிருந்தால், நெற் சேதங்கள் ஏற்பட்டிருக்காது, விவசாய மக்கள் போதியளவில் பயன் பெற்றிருப்பார்கள. எனவே, இந்த நாட்டு மக்களது பணத்தினை கொண்டு, செயற்படுத்தப்படுகின்ற இத்தகைய அரச நிறுவனங்கள் தொழில் நியமனங்களை வழங்குவதற்கும், ஊழல், மோசடிகள், முறைகேடுகளை செய்வதற்கும்தான் இருக்கின்ற எனில், அவற்றால் எமது மக்களுக்கு சுமையே தவிர, நன்மைகள் இல்லை என்றால், இத்தகைய நிறுவனங்கள் தேவையற்றவை என்ற நிலைப்பாட்டிற்கே வர வேண்டியுள்ளது.

Related posts:


நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்து க்கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
தமிழ் மக்கள் தமது உரிமைகளையே கேட்கின்றனர்: சிங்கள மக்களின் உரிமைகளையல்ல - சுதந்திரக் கட்சியின் செயலா...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமன...