அமைச்சர் டக்ளஸ் முயற்சி – தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்பமரப் பிரதேசம் மீண்டும் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறந்து விடப்பட்டது!

Saturday, June 17th, 2023

முல்லைத்தீவு, வட்டுவாகல் சப்தகன்னி (கண்ணகி அம்மன்) ஆலயத்தின் தீர்த்தோற்சவ காலத்தில் பாரம்பரிய வழிப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற, தெய்வீகத் தன்மை வாய்ந்த வேப்ப மரப் பிரதேசம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மீண்டும் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் கடந்த காலங்களில் இராணுவ முகாம் வளாகத்தினுள் அமைந்திருந்த நிலையில், பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த இடத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை யேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. –

இதேவேளை

வட்டுவாகல் பிரதேச கடற்றொழிலாளர்களின் மீன்பிடி இறங்கு துறைக்கு செல்வதற்கு பொருத்தமான வீதியைப் புனரமைத்து கடற்றொழிலாளர்களின் பாவனைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழிலாசார் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடைபெற்றிருந்தது.

இதன்போது, குறித்த வீதி தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கட்டளை தளபதியுடன் கலந்துரையாடிய அமைச்சர், வட்டுவாகல் இறங்கு துறைக்கான கடற்கரை வீதி முழுமையாக விடுவிக்கப்படும் வரையில், தற்காலிக ஏற்பாடாக பாடசாலை வீதியை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வீதியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் தேவையானளவு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தேவையான அதிகாரிகளுடன் தொர்பு பேசியமை குறிப்பிடத்தக்கது.-

000

Related posts:


அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் - நாடாளுமன்றில்டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்...
நிலைபேறான பொருளாதார கட்டமைப்பிற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.- ஜப்பான் தூதுவரிம் அமைச்ச...
திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது - விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்...