அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – அடையாள அட்டை இன்மையால் அஸ்வெசும கொடுப்பனவை பெறமுடியாதவர்களுக்கு தீர்வு!

Friday, March 29th, 2024

கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இன்மை காரணத்தால் பலர் அஸ்வெசும கொடுப்பனவுகளை வங்கிகளில் பெறமுடியாத நிலை தோன்றியுள்ள நிலையில் அது தொடர்பாக கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கடற்றொழில்  அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலை அதற்கான தீர்வு இன்று எட்டப்பட்டுள்ளது..

மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இல்லாதோருக்கு இலங்கை வங்கி மற்றும் கிராமிய அபிவிருத்தி வங்கிகளில் ஆறுமாத தவணை அடிப்படையில் வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான காலம் 29.02.2024 இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.

இந்நிலையில் மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாத கணக்குகளை முடக்குவதற்கான அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையினால் அடையாள அட்டை அற்ற கணக்குகளுக்கு அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவதில் சிக்கல் தோன்றியுள்ளதாக வங்கி தரப்பினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவயதிலேயே குடியேறிய 50 வயதிற்கு மேற்பட்டோரிடமே அடையாள அட்டை இல்லாத நிலை காணப்படுவதோடு அவர்களுக்கான பிறப்புச்சான்றிதழ் காணப்படாமையுடன் பலரிக்கு தாம் பிறந்த இடங்கள் கூட தெரியாமையினாலே அடையாள அட்டை பெறுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.

இந்த விடையம் இன்றையதினம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  அடையாள அட்டை அற்றோர் அஸ்வெசும கொடுப்பனவை  பெறுவதற்கான  காலத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு துறைசார் தரப்பினரூடாக அதிகரிப்பதுடன் அந்த காலப்பகுதிக்குள் பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை இல்லாதோருக்காக நடமாடும் சேவையை நடத்தி அவர்களுக்கான நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கையின் மூலமாக அடையாள அட்டை இன்மையால் கிளிநொச்சி மாவட்டத்தில் அஸ்வெசும கொடுப்பனவை பெறமுடியாத நிலையில் காணப்பட்ட 1000 ற்கும் அதிகமானோர் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: