மீன்பிடி துறைமுகங்களை அமைப்பது தொடர்பில் பிரான்ஸ் நிபுணர்களுடன் அமைச்சர் ஆராய்வு!

Monday, November 25th, 2019

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் ஊடாக பிரான்ஸ் அரசின் உதவியைப் பெற்று நாடளாவிய ரீதியில் 21 மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று அமைச்சில் நடைபெற்றது.

கடல் உற்பத்திகளின் தரத்தைமேம்படுத்தி அதன் ஊடான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் உள்ளூர் பயனாளிகளுக்குசுகாதாரமான கடலுணவை வழங்கும் முகமாகவும் முதற் கட்டமாக நான்கு கடற்றொழில் துறைமுகங்களை தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கையில் அமையப் பெற்றுள்ள 21 பிரதான கடற்றொழில் துறைமுகங்களில் காலி பேருவலை குடாவெல்ல புராணவெல்ல ஆகிய 04 கடற்றொழில் துறைமுகங்களே முதற் கட்டமாகதரம் உயர்த்தப்படவுள்ள நிலையில் மேற்படிதரம் உயர்த்தும் ஏற்பாடுகளைவிரைந்து முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதன் ஊடாகமேற்படி 04 கடற்றொழில் துறைமுகங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களது வாழ்வாதாரங்கள் உயருகின்ற அதேவேளை தரமான கடற்றொழில் உற்பத்திகளின் மூலமானநாட்டின் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிக்க இயலும் என்பதால் இத்திட்டத்தை குறித்த பகுதிமக்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

மேற்படிதிட்டமானது பிரான்ஸ் நாட்டு அரச அனுசரணையுடனான அரசசார் நிறுவனமான பிரான்ஸ் அபிவிருத்திக்கான முகவர்நிறுவனம் இலங்கை கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் அமைச்சருடன் பிரான்ஸ் நாட்டின் நிபுணர்களும் , அமைச்சின் துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்


Related posts:


வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளைக் கட்டும்பணிகள் மார்கழி மாதம் முதல்வ...
இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்...