அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய மீனவர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம்!

தேசிய மீனவர் மஹா சமேளனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம், குறித்த சமேளனத்தின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், எதிர்காலத்தில் சமேளனத்தின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும், கடற்றொழில் மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
சமேளனத்தின் செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சமேளனத்தின் கடற்றொழில் மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்
Related posts:
ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி த...
பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் - ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் வாழ்த்து!
வெற்றி தோல்வி சமமானவை - கிடைக்கும் சந்தர்பத்தை உங்களுக்கானதாக்குங்கள்- அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
|
|