ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, October 18th, 2019

ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது மக்களை ஊசுப்பேற்றி மறுபடியும் ஏமாற்றுவதற்கான ஒரு கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. கிடைத்ததை எல்லாம் கைநழுவச் செய்துவிட்டு தற்போது மறுபடியும் கூட்டமைத்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதாக கூறி மக்களிடம் வாக்குக் கேட்டக முற்படுகின்றனர்  ஆனாலும் இவர்களது கதைகளை நம்ப இனியும் எமது மக்கள் தயாராக இல்லை என்று நம்புகின்றேன்.

இருப்பதை பாதுகாத்துக்கொண்டு பெறவேண்டியவற்றை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும் என்பதே  எமது நிலைப்பாடாகும். இதையே நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போதைய ஆட்சியை உருவாக்குவதற்காக எவ்வளவோ உசுப்பேத்தல்களை மக்களிடத்தில் கூறி வாக்குகளை பெற்றார்கள். ஆனால் இன்று அவர்களது வாக்குறுதிகளிலிருந்து தப்பதித்துக்கொள்ள  மற்றுமொரு கூட்டை உருவாக்க முயற்சிக்கின்றனர். இவர்களது சுயநலன்களாலும் ஆளுடைமயற்ற போக்கினாலும் சிறிய தேவைகளுக்கு கூட மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.


வடக்கை நோக்கி  யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் பேரழிவை சந்திக்கப் போகின்றார்கள் அதை தடுக்க வாருங்கள் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வோம். நானும் அதில் கலந்து கொள்கின்றேன்  என கூட்டமைப்பினரிடம் கோரியிருந்தேன். சம்மதம் தெரிவித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வரவில்லை. ஏனெனில் அவர்கள் யுத்தம் நடப்பதை  விரும்பியிருந்ததுடன் மக்களது அழிவையும் விரும்பியிருந்தனர் என எண்ணத் தோன்றுகின்றது.


நாம் முன்வைத்துள்ள அரசியல் உரிமை, அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி ஆகிய மூன்று விடயஙளுக்குள்ளே   தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல விதமான பிரச்சினைகளும் அடங்கி இருக்கின்றன. இதனை முன்னிறுத்தி அதற்கு தீர்வு காண்பதற்கே நாம் உழைத்துவருகின்றோம். அவற்றைச் செய்வோம். செய்விப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.


அந்தவகையில் பெரும்பான்மைக் கட்சி ஒன்றுடன்  இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தியே எமது முன்னெடுப்புகளை வெற்றிகொள்ள முடியும். அதானால்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவை ஆதரிக்குமாறு மக்களிடம் கோருகின்றோம்.

கோட்டபயவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அந்த வெற்றியை  மக்களின் வெற்றியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் வெற்றியாளர்களாக மாறுவார்கள். இதுவே எனது எதிர்பார்ப்பாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும்  - டக்ளஸ் தேவானந்தா சப...
இந்திய தேசத்தால் தேடப்படும் குற்றவாளி நான் அல்ல - அரியாலையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...

வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் - டக்ளஸ் எம்.ப...
யாழ். ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் கலந்து கொள்ளவேண்டும் - MPகளான சுமந்திரன், கஜேந்தி...
அராசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் - வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார...