அராசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, April 2nd, 2022

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சகஜ நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

நீண்ட பல வருடங்களாக எமது நாடு எதிர்கொண்ட பொருளாதார சவால்களின் திரட்சியே இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு அவற்றில் வெற்றி பெற்ற எமது அரசாங்கம், தற்போதைய பொருளாதார சவால்களையும் முறியடிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது

இவ்வாறான நிலையில், மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் எதிரணிகள், மக்கள் மத்தியில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வதுடன் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான போராட்டங்கள் விளையாட்டுக் களங்களில் வீரர்கள் சவால்களை எதிர்கொள்ளுகின்ற போது, ரசிகர்களினால் வழஙகப்படுகின் உற்சாகமூட்டல்கள் போன்றே அமைந்துள்ளன.

ரசிகர்களின் உற்சாகமூட்டல்கள், விளையாட்டு வீரர்களுக்கு வெற்றியடைய வேண்டும் என்ற வைராக்கியத்தினையும் உந்துதலை ஏற்படுத்தவது போன்றே, எதிரணிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற போராட்டங்கள் எமது அரசாங்கத்திற்கு உந்துதலாக அமைந்திருக்கின்றன.

எனவே, மக்கள் சகிப்புத் தன்மையுடனும் நம்பிக்கையுடனும் எதிர்வரும் சில நாட்களை எதிர்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். – 02.04.2022

Related posts:

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்...
அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார்...
கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...