அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவலகம் வருகைதந்த முல்லைத்தீவு கடற்றொழில் அமைப்புகள்!
Sunday, May 19th, 2024
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வினை காணும் வழிவகைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, கடற்றொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு நீர் வேளாண்மையை சாத்தியமான இடங்களில் விருத்தி தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வேலணை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை மீளத் திறக்க டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!
ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதி!
|
|
|


