அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் – திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பாக ஆராய்வு!

Monday, October 23rd, 2023

தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது கடற்றொழில் அமைச்சினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பாக சம்மேளன பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

சம்மேளனத்தின் கூட்டத்தின் போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நெக்டா, கடற்றொழில் மீன்பிடிக் கூட்டுத்தாபனம், வடகடல் நிறுவனம் மற்றும் கடற்றொழில் மாவட்டத்தின் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

இலங்கையில் கடற்பாசி வளர்ப்பு தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு முன்வந்திருந்த இந்திய முதலீட்டாளர்கள்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து தமது திட்டம் தொடர்பில் கலந்துரையாடினார்.

இலங்கையில் கடற்பாசி வளர்ப்பை மேம்படுத்தி பலருக்கு இத்துறையில் கூடுதல் பலன் கிடைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த தாம் எதிர்பார்ப்பதாகவும் இந்திய முதலீட்டாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

முன்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தனர்.

இன்று அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாகவும் தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத்தந்து உதவுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் - அனுதாப...
கடலுணவுகளை களஞ்சியப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் டக்ளஸின் தலைமையில் கடற்றொழிலாளர்களுக்கு...
அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்...

வடக்கில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்வு: பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை! 
மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவச அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உற...