அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம், குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துதல், சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
அத்துடன், கொறோனா பரவல், தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ள நிலைவரம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
000
Related posts:
நல்லாட்சி வழங்கிய தொழில் வாய்ப்புக்களை நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றோம் - பாதிக்கப்பட்டவர்கள் அமை...
இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரி...
அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி விழா...
|
|