அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ‘பச்சை கொடி’!

Saturday, May 28th, 2022

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான  அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

தொலைபேசி ஊடாக இன்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-

000

Related posts:

வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான...
முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் - பருத்தித் துறையில் டக்ளஸ் எம்.பி.
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்...
வடக்கின் அபிவிருத்திக்கென பல மில்லியன் நிதியை வழங்கும் இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் – சந்தரப்பங்கள...