அமைச்சரானார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா: மகிழ்ச்சியின் உச்சத்தில் வடபகுதி மக்கள் !

Tuesday, October 30th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றதை அடுத்து வடபகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளதுடன் மக்கள் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தி வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான பல்வேறு தேவைப்பாடுகள் முடங்கிக் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு  அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு  மற்று இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருந்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக பதவியேற்றதை அடுத்து தாம் இதுவரை கண்டுவந்த துன்ப துயரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வடபகுதி மக்களிடையே தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Untitled-3 copy

20

44945110_2146812958917687_8724773806062698496_o

Related posts:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெடுந்தீவு கடலில் கைதான கடற்றொழிலாளர்களை விடுவிக்க முயற்சி – டக்ளஸ் எம...
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முட...
தமிழ்நாடு மாநிலத்தின் கடற்றொழிலாளர்களுக்கான தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பொன்னாடை போர்த்த...

எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமூகம் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாத...
பட்டி வலைகள் சட்ட விரோதமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி நெகிழ்வுப் போக்குடன் இருப்பதாகவும் அமைச்ச...