அனுபவங்களின் அடிப்படையில், தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, February 19th, 2023

தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான விடயங்களை தென்னிலங்கையின் அரசியல் தரப்புக்கள் கடந்த காலங்களில் கையாண்ட அனுபவங்களின் அடிப்படையில், தற்போது தமிழ் தரப்புக்களின் அணுகுமுறைகள் அமைய வேண்டும்.

இல்லையேல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு சிலர் வெளியிடுகின்ற கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதுடன், அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் முயற்சிகளுக்கும் தடங்கல்களை ஏற்படுத்தும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்;.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பலதரப்பட்டவர்களுடனான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மக்களின் ஆணையை பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் - வேட்பு மனு தாக்கல் செய்தபின் டக்ளஸ் தேவானந்...
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...
கோயிலாக்கண்டி - துறையூரில் இறால் வளர்ப்பு திட்டம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்...