அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககையால் மக்கள் மகிழ்ச்சி!

Sunday, July 19th, 2020

அனலைதீவு இறங்கு துறையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழுதாரகை பயணிகள் படகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய திருத்த வேலைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தீவகப் பகுதிகளுக்கான சுற்றுப்பயணத்தினை நேற்று மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலினை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு சரச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட எழுதாரகை பயணிகள் படகு நீண்டகாலமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அனலைதீவு இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்கொள்வதுடன், ஒருவர் தவறி விழுந்தமையினால் கால் எலும்பும் முறிந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே  தற்போது அமைச்சரின் முயற்சியினால் இன்று குறித்த படகு அப்புறப்படுத்தப்பட்டு திருத்த பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அதேவேளை, குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்ட வடதாரகை படகிலும் காணப்படும் குறைபாடுகள் திருத்தியமைக்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், தீவுப் பகுதிகளுக்கான கட்டிட நிர்மாணப் பொருட்களை எடுத்துச் செல்வதில் காணப்படும் இன்னல்கள் தொடர்பில் பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், தீவகங்களுக்கு இடையில் பொருட்களை எடுத்துச் செல்வதை இலகுபடுத்தும் வகையில் மிதக்கும் பாதைகளை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் ஆலோசனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான செயலமர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந...
ஜனாதிபதி கோரிக்கை - காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...