அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, December 18th, 2019
அதிபர் சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி அடைவு மட்டத்தை எட்டியிருந்த நிலையில் நியமனம் வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பதவி நியமனத்தை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (18) மாளியாவத்தையிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது விடயம் தொடர்பாக குறித்து துறைசார் கல்வி அமைச்சர் டளஸ் அளகப்பெருமாவுடன் தொலைபேசியூடாக உரையாடி பாதிக்கப்பட்டவர்களின் நியாயங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|






