ஊழல் மோசடி செய்ய வசதியாகவே 90 வீத நிதி வீதி அபிவிருத்திக்கு செலவிடப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2019

இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பிலான குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது. இந்த வீதி அபிவிருத்தி ஒன்றுதான் நாட்டின் அபிவிருத்தி எனக் கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு, தீவிர பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் கீழான பிரேரணை மற்றும் உற்பத்தி வரி விஷேட ஏற்பாடுகளின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஆட்சியாளர்களும், இந்த ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே என்று கூறுகின்ற தமிழ்த் தரப்பினரும் வீதி அபிவிருத்தி ஒன்றுதான் நாட்டின் – நாட்டு மக்களின் அடிப்படை அபிவிருத்தி என நினைத்துக் கொண்டிருக்கின்றார்களோ? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இருக்கின்றது.

துரித கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்த அரசாங்கத்தினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று கட்டங்களாக கோடிக் கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியின் மூலமாக 13 வகையான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், இந்த நிதியில் 90 வீதமான நிதி வீதி அபவிருத்திப் பணிகளை மாத்திரம் மேற்கொள்வதற்கே செலவிடப்பட்டு வருவதாக வலிகாமம் தென் மேற்கு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேற்படி நிதி ஒதுக்கீடுகள் மூலமாக மேற்படி பகுதியில் 17 வட்டாரங்களை உள்ளடக்கிய 28 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும், அவசர, அவசரமாக மேற்படி வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இப் பணிகளின்போது, பணிகளை மேற்பார்வை செய்வதற்கு எவருமில்லாத நிலையில் ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தாமல், மிகவம் தரம் குன்றிய வகையில் மேற்படி வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மக்கள் முறைப்படுகின்றனர்.

எனவே, இந்தப் பணிகளின் பின்னால் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே எமது மக்கள் நம்புகின்றனர். இப்படியே போனால், இவர்கள் சொல்கின்ற ஏதோ போராட்டங்கள் வெடிக்காது. இந்த வீதிகள் தான் வெடிக்கும் என்றே எமது மக்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்தப் பணிகளின் பின்னால் ஊழல், மோசடிகள் இடம்பெற்றிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே எமது மக்கள் நம்புகின்றனர். இப்படியே போனால், இவர்கள் சொல்கின்ற ஏதோ வெடிக்கும் என்பது இந்த வீதிகள் மற்றும் ஊழல் மோசடிகள் தான் வெடிக்கும் என்றே எமது மக்கள் கருதுகின்றனர்.

Related posts:

வடக்கில் கிராம சேவை யாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடன் நடவடிக்கை எடுக்கவும்! நாடாளுமன்ற உறுப்ப...
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் 2021 - கிளிநொச்சி மாவட்ட பயனாளர்களுக்கு அம...

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா - முல்லை. கேப்பாப்புலவு ...
வடக்கு - கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
மன்னார் விரிகுடா எதிர்கொள்ளும் விவகாரங்களும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் - வங்காள விரிகுடா கலந்துரையா...