அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவிப்பு!
Saturday, February 6th, 2021
என் மீது பலதடவைகள் கொலைமுயற்சி மேற்கொண்ட பிரபாகரனையே கொலை செய்வதற்கு நான் முயற்சித்ததில்லை என கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை எனவும் அவர்களை தன்னோடு இணைத்து செயலாற்றவே தான் முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் குறித்த மீளாய்வு கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போது யாழ்.மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு நெருக்குவாரம் இருப்பதாக வெளியாகும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில் – யாழ்.மாவட்டத்தில் அரச அதிகாரிகளுக்கு நெருக்குவாரங்கள் உள்ளதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் ஒருபோதும் அரச அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணத்துடன் நடந்து கொண்டதில்லை.
மாறாக அவர்களையும் இணைத்து செயலாற்றுவதற்கே முயற்சித்திருக்கின்றேன். விசேடமாக சொன்னால் பிரபாகரனையே கொலை செய்ய நான் முயற்சிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


