அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திட்டத்தை இயந்திரங்களைப் பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் – மின்சார இணைப்பினைப் ஏற்படுத்துவதற்கும் ஏற்பாடு!

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நன்னீர் மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார்.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தினை வழங்கக் கூடிய குறித்த குளத்தினை புனரமைப்பதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான மீன் குஞ்சுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று துறைசார் நிபுணர்களினால் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த தொட்டிகள் புனரமைக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், முடியுமானால் தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் தொட்டிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை கிளிநொச்சி, அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திடடத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்ப்பாசண இயந்திரங்களைப் பார்வையிட்டதுடன், குறித்த திட்டத்திற்கு மின்சார இணைப்பினைப் ஏற்படுத்துவதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கௌதாரிமுனையை சேர்ந்த 61 பேர் கடலடைப் பணணை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், குறித்த இடத்தில் தனியார் முதலீட்டாளர்களின் நிதிப் பங்களிப்புடன் கடலட்டை ஏற்றுமதிக் கிராமம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்திருந்தார்.
இதேபோன்று இரணைதீவு இரணைமாதா நகர் கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் நிர்வாகிகளுக்கும், கடந்த பெப்ரவரி மாதமளவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட குறித்த கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்திற்கான முதலீடுகளை வளங்கிய தனியார் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இன்றையதினம் இடம்பெற்றது.
இதனிடையே
கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த சமுர்த்திப் பணியாளர்கள் சிலர் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமது குறைகளையும் எதிர்கொள்ளும் அசௌகரியங்களையும் தெரித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டு நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|